2025 ஜூலை 09, புதன்கிழமை

சைக்கிள் திருடன் கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பொலிகண்டி பகுதியிலுள்ள வீதியொன்றில் திங்கட்கிழமை (25) நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளொன்றைத் திருடிய சந்தேகநபரை வியாழக்கிழமை (28) காலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணொருவர் தரித்துவிட்டுச் சென்ற துவிச்சக்கர வண்டியே இவ்வாறு திருட்டுப்போயிருந்தது.
இது தொடர்பில் மேற்படி பெண் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், துவிச்சக்கர வண்டியை திருடியவர், மேற்படி பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்ளவர்களுக்கு மேற்படி சைக்கிளை விற்றுள்ளார்.

இது, தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டு சைக்கிளை விற்பனை செய்தவரைக் கைது செய்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .