2025 ஜூலை 09, புதன்கிழமை

தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளை நிர்வாகம் தெரிவு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளை நிர்வாக சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட கிளைத்தலைவர் பெரியதம்பி கனகசபாபதி தெரிவித்தார்.

நாமகள் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்தே மேற்படி நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, புதிய நிர்வாகசபையின் தலைவராக அ.ஜெபநேசனும், செயலாளராக ச.செந்தில்குமரனும், பொருளாளராக க.உஷக்ந்தனும், உப தலைவராக பே.சுபாகரும், உப செயலாளராக அ.குயிலினியும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் 10 பேர் நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும், இக் கூட்டத்தில் வைத்து சுமார் 50 பேர் வரையில் புதிதாக கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தமிழரசுக்கட்சியின் கட்சி மாநாட்டை முன்னிட்டே கிளைகள் புனரமைப்பு இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .