2025 ஜூலை 09, புதன்கிழமை

இந்திய படகுகளை விடுவிக்க சட்டமா அதிபரின் ஆலோசனை தேவை: நீதிமன்றம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெறப்படல் வேண்டும் என்று கூறிய ஊர்காவற்றுரை நீதவான் நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தின் தீவகக் கடற்பரப்புக்களில் வைத்து கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட 69 மீனவர்களின் படகுகள் மற்றும் உபரகரணங்கள் தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் வியாழக்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், மேற்படி வழக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெறும் பொருட்டு செபடெம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, நல்லெண்ண அடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் மேற்படி 69 மீனவர்களும் கடந்த 14ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இருந்தும், அவர்களின் படகுகள் உபகரணங்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பிரதிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

ஜூலை மாதம் 29ஆம் திகதி நெடுந்தீவிற்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து 7 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்களும், ஜூலை 22ஆம் திகதி எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .