2025 ஜூலை 09, புதன்கிழமை

வெடிமருந்து வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பளை, செல்வபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரை செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய யாழ்.நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர் யாழ்.பாஇஷயூர்ப் பகுதியைச் சேர்ந்த ஐவருக்கு, 72 கிலோ வெடிபொருட்களை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 1ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்டு, மேற்படி சந்தேகநபர் பூஸா தடுப்பு முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேற்படி வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேற்படி வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதி சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .