2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தமிழ் கற்ற இராணுவத்தினருக்கான சான்றிதழ் வழங்கல்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 இராணுவத்தினருக்கான சான்றிதழ்கள், காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினம் விடுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (29) இரவு வழங்கப்பட்டன. 

32 அதிகாரிகள் மற்றும் 1601 இராணுவச் சிப்பாய்கள் உள்ளடலங்கலாக 1633 பேர் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேற்படி பயிற்சிநெறி கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து இராணுவத்தினரும் தமிழ் மொழி கற்றுவிடுவார்கள் என யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தெரிவித்தார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .