2025 ஜூலை 09, புதன்கிழமை

மலேரியா தொடர்பில் ஹாஜிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: மேகலா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புனித ஹஜ் கடமையை முடித்து நாட்டுக்கு வந்த பின்னர் மலேரியா தொடர்பில் ஹாஜிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி மேகலா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை (29) இம்முறை புனித ஹஜ் கடமைக்காக செல்லும் ஹாஜிகளுக்கு தடுப்பூசி மருந்தேற்றும் நிகழ்வில் அறிவுரை வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

மலேரியா என்பது தொற்று நோயாகும். மத்திய கிழக்கு நாடுகளில் இது அதிகமானோருக்கு பரவுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சிலருக்கு இந்த மலேரியா தொற்று காணப்படுகின்றது.

அந்த வகையில் புனித ஹஜ் கடமைக்காக செல்பவர்களும் இந்த மலேரியா தொற்று தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். ஹஜ் கடமையை முடித்து வந்ததன் பின்னர் மலேரியா தொடர்பில் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது காத்தான்குடி சுகாதார அலுவலகத்தின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.றபீக், மற்றும் சுகாதார பரிசோதகர் எம்.றஹ்மத்துல்லாஹ் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், மற்றும் மௌலவி எம்.ஏ.மஸுத் காஸிமி உட்பட ஹாஜிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முறை ஹஜ் கடமைக்காக செல்லும் ஹாஜிகளுக்கு தடுப்பூசி மருந்தேற்றும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலா ஒருவருக்கு 2500 ரூபாய் பெறுமதியான இந்த தடுப்பூசி மருந்தை சுகாதார அமைச்சு இலவசமாக வழங்கியுள்ளதாக காத்தான்குடி சுகாதார அலுவலகத்தின் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.றபீக் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .