2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். இளவாலை பனிப்புலம் பகுதியில் 5 கிராம் கஞ்சாவுடன் 33 வயதுடைய சந்தேகநபரொருவர் சனிக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இளவாலைப் பொலிஸாருக்;குக் கிடைத்த இரகசிய தகலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்ற போது, மூன்று பேர் அவ்விடத்தில் நின்றுள்ளனர்.

அவர்களைச் சோதனை செய்த போது, மேற்படி நபரின் பொக்கற்றில் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அருகில் நின்றிருந்த இருவரும், மேற்படி நபரிடம் கஞ்சா இருந்தமை தொடர்பில் அறிந்திருக்கவில்லையென விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேற்படி சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .