2025 ஜூலை 09, புதன்கிழமை

மூதாட்டியைத் தாக்கிவிட்டு நகை, பணம் கொள்ளை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

யாழ். வடமராட்சி வதிரிப் பகுதியிலுளள் வீடொன்றில் தனிமையாக இருந்த மூதாட்யொருவரை தாக்கிவிட்டு 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை, பணம் சனிக்கிழமை (30) அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் போது செல்வராசா வசந்தமணி (வயது 66) என்ற மூதாட்டி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கொள்ளையர்கள் வந்த துவிச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில்,

மேற்படி மூதாட்டியின் கணவர் மற்றும் பிள்ளைகள் கொழும்பில் பணியாற்றி வருவதனால் வீட்டில் தனிமையிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை (30) அதிகாலை 5 மணியளவில், மேற்படி மூதாட்டியின் வீட்டுக் கதவை இனந்தெரியாத நபர்கள் தட்டியுள்ளனர்.

மூதாட்டி கதவைத் திறந்ததையடுத்து, முகமூடி அணிந்த இருவர் மூதாட்டியைத் தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலுள்ள நகைகளை எடுத்துத் தரும்படி மிரட்டியுள்ளனர்.

இதன் காரணத்தினால் வீட்டிலிருந்த 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் காசு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார்.

மேற்படி கொள்ளையர்கள் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அங்கிருந்த பெண்கள் கூக்குரலிடவே திருடர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் மோப்பநாயின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளச் சென்றபோது, மூதாட்டியின் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கொள்ளையர்களினால் கைவிட்டுச் செல்லப்பட்ட துவிச்சக்கரவண்டியை மோப்பநாய் அடையாளங்காட்டியுள்ளது.

இதனைக் கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .