2025 ஜூலை 09, புதன்கிழமை

அரிசி மூடைகள் திருட்டு

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா

யாழ். ஊர்காவற்துறை நாராந்தனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கடையில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகள் நேற்று சனிக்கிழமை (30) இரவு திருடப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தனர்.

சங்கக்கடையின் பூட்டை உடைத்து உள்நுழைந்து, அங்கிருந்து 50 கிலோ கிராம் நிறையுடைய 4 அரிசி மூடைகள் மற்றும் 25 கிலோ நிறையுடைய 1 அரிசி மூடை ஆகியனவே திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .