2025 ஜூலை 09, புதன்கிழமை

மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் விடுவிப்பு

George   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி மாட்டிறைச்சியை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர், அனுமதிப்பத்திரத்தை பதில் நீதவானிடம் காண்பித்ததைத் தொடர்ந்து மேற்படி நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விஜயராணி உருத்திரசபாபதி ஞாயிற்றுக்கிழமை (31) மாலை விடுவித்தார்.

மேற்படி நபர் வதிரிப் பகுதியில் வைத்து நெல்லியடிப் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (31) காலை கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை ஆஜர்ப்படுத்திய போது, மாட்டிறைச்சி கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை நீதவானிடம் மேற்படி நபர் காண்பித்தார்.

இதனையடுத்து, நீதவான் மேற்படி நபரை விடுவித்ததுடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 15 கிலோ மாட்டிறைச்சியையும் ஒப்படைக்கும்படி நீதவான் பொலிஸாரிடம் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .