2025 ஜூலை 09, புதன்கிழமை

யாழ் - கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாணம் - கொழும்பு இரவு நேர தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கான வழி அனுமதிப்பத்திரம் பெற்றுத் தரும்படியும் அதுவரையில் பொலிஸார் தங்களை கைதுசெய்யக்கூடாது எனக்கூறியும் பண்ணைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்விடத்துக்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் உங்களுக்கு வழி அனுமதிப்பத்திரம் தொடர்பில் பொலிஸாரால் உங்களுக்கு இன்று சிக்கல் ஏற்படாது எனக்கூறியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இது தொடர்பாகத் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளும் பஸ்களில் சிலவற்றுக்கு மட்டும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வழி அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் சனிக்கிழமை (30) புறப்பட்ட பஸ்களில், வழி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டன.

இதனால், அச்சங்கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் வழி அனுமதிப்பத்திரமில்லாத பஸ் உரிமையாளர்கள், தங்களுக்கு வழி அனுமதிப்பத்திரம் கிடைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வழிசமைக்க வேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்தினர்.

தாங்கள் அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தயாராகவிருந்த போதும் தங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லையென அவர்கள் கூறினார்கள்.

இதனால் கொழும்பு செல்லும் அனைத்து பஸ்களும் ஸ்தம்பித்து நின்றன.

இந்நிலையில் அங்கு சென்ற யாழ்ப்பாணப் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (31) நீங்கள் கொழும்பு பயணம் மேற்கொள்ளும் போது எவ்வித தடங்கல்களும் ஏற்படாதவாறு தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், வழி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகளை துரித்தப்படுத்துமாறும் தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .