2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆலயத்தில் அநாகரிகமாக நடந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

George   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட பெண்னொருவர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார், செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

செல்வச்சந்நிதி ஆலயத்தில் அர்ச்சனைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேற்படி பெண், ஆலயத்திற்கு வருபவர்களை தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளார்.

இதனை அவதானித்த ஆலயக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (31) மேற்படி பெண்ணை எச்சரிக்கை செய்ய சென்றபோது, மேற்படி பெண் பொலிஸாரையும் தகாத வார்த்தையால் ஏசியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்து,  பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் திங்கட்கிழமை (01) ஆஜர்ப்படுத்தியபோது,  நீதவான், பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .