2025 ஜூலை 09, புதன்கிழமை

கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்பு; கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா, செல்வநாயகம் கபிலன்


கச்சதீவுக்கு அண்மிய கடற்பரப்பில் படகு மூழ்கிய நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஆறு பேரை காங்கேசன்துறை கடற்படையினர், இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை மீட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து காங்கேசன்துறைக் கடற்படையினரால் இன்று (02) அதிகாலை கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

அத்துடன், மீனவர்களுடன் கைது செய்யப்பட்ட 15 வயது சிறுவனை, அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் வந்த மேற்படி மீனவர்களின்  ஒரு படகு கடலில் மூழ்கிய நிலையில், மற்றைய படகுடன் 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ் கடற்றொழில் நீரியல் வளத்துறைப் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே, அம்மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, படகு மூழ்கிய நிலையில் மேலும் 6 இந்திய மீனவர்களை கச்சதீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (02) காலையில் மீட்டதாக காங்கேசன்துறைக் கடற்படையினர் தெரிவித்தனர்.

மேற்படி 6 மீனவர்களும் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து வந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர்கள் தற்போது கடற்படையினரின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .