2025 ஜூலை 09, புதன்கிழமை

இளைய வளர்ப்பு முறை மீண்டும் ஆரம்பம்

George   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தால் உருளைக்கிழங்கு, வாழை, பனை போன்றவற்றை இளைய வளர்ப்பு முறையில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடபிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளர் கலாநிதி ஜே.அரசகேசரி, இன்று செவ்வாய்க்கிழமை(02) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில், வடமாகாணத்தில் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இளைய வளர்ப்பு ஆய்வு கூடம் ஒன்று இயங்கி வந்தது. 

இருந்தும், தவிர்க்க முடியாத காரணங்களால் சிறிது காலங்கள் அந்த ஆய்வுகூடம் இயங்காமல் இருந்துள்ளது.

தற்போது சில அதிகாரிகளின் விடாமுயற்சியால், இந்த ஆய்வு கூடம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வுகூடத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்  வெவ்வேறு ஆண் பனை, பெண் பனைகளிலிருந்து புதிய இளம் கன்றுகளை இளைய வளர்ப்பின் மூலம் உருவாக்கவுள்ளனர். 

அத்துடன், உருளைக்கிழங்கு மற்றும் வாழை போன்ற நடுகைப்பொருட்களின் உருவாக்கமும் திருநெல்வேலி விவசாய ஆராய்சி நிலையத்தால் மேற்கொள்ளப்படுகின்றது. 

இவற்றிற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வருட இறுதிக்குள் அவை பூர்த்தியாக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் மேலும் கூறினார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .