2025 ஜூலை 09, புதன்கிழமை

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

George   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கல்வியங்காட்டுச் சந்தியில் வைத்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஞாயிற்றுக்கிழமை (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

கல்வியங்காட்டுச் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டுப் போயிருந்தது.

இது தொடர்பில் உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், கோப்பாய்;ப் போக்குவரத்துப் பொலிஸார் கோப்பாய்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மாலை 4 பேருடன் வந்த மோட்டார் சைக்கிளொன்றை மறிக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, மேற்படி மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பிடித்து ஓடியுள்ளனர். அவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்றவேளையில், மேற்படி நான்கு நபர்களும் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றனர்.

தொடர்ந்து, மேற்படி மோட்டார் சைக்கிளை மீட்டு, விசாரணைகளை முன்னெடுத்த வேளை மேற்படி மோட்டார் சைக்கிள் கல்வியங்காட்டுப் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், தப்பியோடிய நால்வர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .