2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்டவிரோதமான முறையில் குழந்தையை வாங்கியவருக்கு விளக்கமறியல்

George   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் குழந்தையொன்றை வாங்கி வளர்த்து வந்த கரணவாய்ப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் பெண்கள் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டார்.

அத்துடன், பெண் வளர்த்து வந்த 9 மாதக் குழந்தையை கைதடி சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைத்துப் பராமரிக்கும்படியும் நீதவான் இதன்போது கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கரணவாய்ப் பகுதியைச் சேர்ந்த மேற்படி பெண் திருமணம் செய்து 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாமல் குழந்தை பெற்ற பெண்ணிடமிருந்த குழந்தையை ஜூலை மாதம் வாங்கி, வளர்த்து வந்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்த குடும்பநல உத்தியோகத்தர், இவ்விடயத்தை கரவெட்டி சுகாதார வைத்தியதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

சுகாதார வைத்தியதிகாரி இது தொடர்பில் கரவெட்டிப் பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி சிற்றம்பலம் புவனேந்திரனின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து, சிறுவர் நன்னடத்தை அதிகாரி நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம், கரணவாய் பெண்ணிற்கு எதிராக சிறுவர் நீதிமன்றத்தில் நெல்லியடிப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.

மேற்படி வழக்கு செவ்வாய்க்கிழமை (02) விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கரணவாய்ப் பெண், தான் நல்லெண்ணத்தில் தான் குழந்தையை வாங்கியதாகவும், அதற்காக எவ்வித பணமும் கொடுக்கவில்லையெனவும் ஆகவே தனக்குப் பிணை வழங்கும்படி சட்டத்தரணியூடாக விண்ணப்பித்துள்ளார்.

இருந்தும், அந்தப் பிணை மனுவை நிராகரித்த நீதவான் பெண்ணை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .