2025 ஜூலை 09, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், கல்வியங்காடு சந்திப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில், நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (02) மாலை கைது செய்யப்பட்டதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியங்காடு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்;டார் சைக்கிளொன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பூட்டு உடைத்து திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், கோப்பாய் பகுதியில் நான்கு பேருடன் சென்ற மோட்டார் சைக்கிளொன்றை போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மறிக்க முற்பட்டுள்ளனர். இதன்போது, சைக்கிளை விட்டுவிட்டு சந்தேகநபர்கள் ஓடியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை (02) கைது செய்துள்ளனர். தொடர்ந்து மற்றைய 3 சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .