2025 ஜூலை 10, வியாழக்கிழமை

யாழில் முதல் முறையாக அஞ்சல் தினம் கொண்டாட ஏற்பாடு

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழில் முதன்முறையாக ஒக்டோபர் 9ஆம் திகதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படவுள்ளதாக, வடமாகாண பிரதம தபால்மா அதிபர் என்.ரட்ணசிங்கம், புதன்கிழமை (03) தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். அஞ்சல் அலுவலகத் தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

140 ஆவது உலக அஞ்சல் தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இத்தினம் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்வில், அஞ்சல் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பிரதி அமைச்சர் சனத் ஜெயசூரிய ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தபால் திணைக்களத்தில் 2013, 2014 ஆண்டுகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கான விருதுகளும் இந்நிகழ்வில் வைத்து வழங்கப்படவுள்ளன.

அத்துடன், உலக அஞ்சல் தினத்தையொட்டி, ஒரே நாளிலே அஞ்சல் திணைக்கள அடையாள அட்டைகள் வழங்குதல், சிரமதான நடவடிக்கைகள், இரத்ததான நிகழ்வுகள், மொபிட்டல் நிறுவனத்துடன் இணைந்து வீடுவீடாகச் சென்று அலைபேசிக்கான பணம் மீள் நிரப்புதல், இலங்கை சேமிப்பு வங்கியுடன் இணைந்து சேமிப்பை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள், மரநடுகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .