2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எரிபொருள் நிரப்பும்போது தீப்பற்றிய முச்சக்கரவண்டி; சாரதி படுகாயம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம், கல்வியங்காடு சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பச் சென்ற முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி எரிந்ததில் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ரி.சிவதர்சன் (வயது 24) என்பவரே எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பும் போது, திடீரென தீப்பற்றியது. இதன்போது, அங்கு நின்றவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுந்துள்ளனர்.

சம்பவத்தில், குறித்த முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .