2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மீன்சந்தை கூறுவிலை மண்டபங்கள் திறப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, எஸ்.ஜெகநாதன்


யூ.எஸ்.எயிட் நிறுவனம், யாழ்.சமூக செயற்பாட்டு மையத்துடன் இணைந்து யாழிலுள்ள நான்கு மீன்பிடித் துறைமுகங்களுக்கான மீன்களின் கூறுவிலை கூறும் மண்டபங்கள் வியாழக்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டன.

மீள்குடியேறிய மக்களின் நலனுக்காக பணியாற்றுதல் என்னும் திட்டத்தில், 121 மில்லியன் ரூபாய் செயற்றிட்டங்களில் ஒன்றாக இந்த மண்டபங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

காக்கைதீவு, பொன்னாலை, மாதகல் கடற்கரைப்பகுதி மற்றும் மாதகல் மேற்கு பகுதிகளில் அமைக்கப்பட்ட மண்டபங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.

மேற்படி மண்டபங்களை யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் அன்ரூ மன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தார்;கள்.

மேற்படி திட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேற்படி திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தின் சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், கிளிநொச்சியில் பச்சிலைப்பளை பிரதேச செயலக பிரிவிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மேற்படி திட்டத்தில் கிணறுகள், மலசலகூடங்கள் அமைத்தல், வாழ்வாதார உதவிகள் வழங்குதல், பொதுநோக்கு மண்டபங்கள் அமைத்தல், கூறுவிலை மண்டபங்கள் அமைத்தல் உள்ளிட்ட செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .