2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'இலங்கையர் நலனில் அமெரிக்காவின் அக்கறை தொடரும்'

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்,  பொ.சோபிகா


இலங்கை மக்களின் நலனின் அமெரிக்க கொண்டுள்ள அக்கறையில் ஒரு போதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம செயற்றிட்டப் பொறுப்பாளர் அன்ரூ மன் வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

யூ.எஸ்.எயிட் நிறுவனம், யாழ்ப்பாண சமூக செயற்றிட்ட மையத்துடன் இணைந்து யாழில் அமைத்த கூறுவிலை மண்டபங்கள், இன்று வியாழக்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டன. இதில் காக்கைத்தீவு கூறுவிலை மண்டபத்திறப்பு விழாவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகம் மறுவாழ்வு பெறுவதற்கும் அவர்களின் எதிர்காலம் நம்பிக்கை பெற்றுவதற்கும் அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் புரியும்.

நான் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் வந்துள்ளேன். இருந்தும் தற்போது வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. பல மாற்றங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன.

மாற்றங்களில் பெருமை கொள்ளக்கூடிய விடயம் என்னவெனில், அன்றிலிருந்து இன்றுவரை, இலங்கை மக்களின் நலனில் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு மட்டும் மாறவில்லை.

யுத்தத்தின் போது இப்பகுதிகள் முழுமையான அழிவுக்கு உள்ளாகியிருந்தது. அதேபோன்ற இங்குள்ள மக்கள் தங்களுடைய சகல மீன்படி உபகரணங்களையும் இழந்திருந்தனர்.

அவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .