2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளுக்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது: சி.வி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளை இலங்கை அரசாங்கம் அரசியல் சாயம் பூசி கொச்சைப்படுத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

யூ.எஸ்.எயிட் நிறுவனம், யாழ்ப்பாண சமூக செயற்றிட்ட மையத்துடன் இணைந்து யாழில் அமைத்த கூறுவிலை மண்டபங்கள் வியாழக்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டன. இதில் காக்கைத்தீவு மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய முதலமைச்சர், 'வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே தேவையானவை. மாறாக தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை.

அமெரிக்கா எங்களுக்கு பலவிதத்திலும் உதவிகளை செய்து வருகின்றது. யூ.எஸ் எயிட் நிறுவனம் எங்களுக்கு பல விதமான உதவிகளை செய்து தருகின்றது. 

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அந்நிறுவனத்துடன் இணைந்து பலவிதமான செயற்றிட்டங்களில் பங்குபற்றியிருந்தேன்.

தமிழ் மக்களாகிய நாங்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள். போர் பாதிப்புக்களில் இருந்த விடுபட எமக்கு பலவிதமான நன்மைகள் வந்துசேர வேண்டிய தேவை உள்ளது.

அவ்வாறான நன்மைகளை தமிழ் மக்களுக்கு நல்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் முன்வந்துள்ளனர். அவர்களின் உதவிகள் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவேண்டும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .