2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற நால்வரை, சனிக்கிழமை (06) இரவு கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார சபை அதிகாரிகளும், நெல்லியடி பொலிஸாரும் இணைந்து கரவெட்டி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மின்மானிக்குள் ஊசி செருகி, மின்மானியின் வேகத்தை குறைத்த ஒருவரும், திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற மூவருமாக மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், பருத்தித்துறை நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கோணப்புலம் நலன்புரி முகாம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எழு பேர் சனிக்கிழமை (06) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .