2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மணல் அகழ்ந்த சிறுவன் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கொடிகாமம், கெற்பேலி பகுதியில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் ஒருவன், ஞாயிற்றுக்கிழமை (07) கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் திங்கட்கிழமை (08) தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் மூன்று நபர்கள் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்த பொலிஸார், அவ்விடத்துக்கு சென்ற வேளை இருவர் தப்பித்து ஓடியுள்ளனர். இதனையடுத்து, மேற்படி சிறுவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

இதேவேளை, வரணி, இயற்றாலை பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சென்ற 55 வயதுடைய சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபர், இயற்றாலை பகுதியில் இருந்து கொடிகாமம் பகுதிக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கசிப்பு கொண்டு செல்லும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இரு சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .