2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு செயலமர்வு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்


பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் திங்கட்கிழமை (08) இடம்பெற்றது.

சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்காக நடைபெற்ற இந்த செயலமர்வு, சாவகச்சேரி நீதவானும், மாவட்ட நீதவானுமாகிய ஸ்ரீநிதி நந்தசேகரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் இலங்கை சட்ட உதவி நிலையத்தின் சட்ட ஆலோசகர் சஜீவினி ஆரியரத்ன, பருத்தித்துறை தலைமை பொலிஸ் பயிற்சி நிலைய விரிவுரையாளர் புத்திக்க பாலச்சந்திரா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.

சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், அந்த சட்டங்கள் மூலம் எவ்வாறு சிறுவர் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸார் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பொலிஸார், பொதுமக்களுக்கு எவ்வகையில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்றவை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

இந்த செயலமர்வில் சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .