2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சி.வி.க்கு வாகனம் கையளிப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, செவ்வாய்க்கிழமை (09) வழங்கினார்.

வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஆளுநரால் கடந்த ஜூலை 5 ஆம் திகதி வழங்கப்பட்டன.

அத்துடன், முதலமைச்சருக்கு 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (09) முதலமைச்சருக்கு 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றும் சுகாதார அமைச்சருக்கு 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .