2025 ஜூலை 12, சனிக்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை

Thipaan   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். நெல்லியடி இராஜகிராமம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, ஜூலை 13ஆம் திகதி துஷ்பிரயோகம் செய்த 26 வயது சந்தேகநபரை தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியுடைய இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, செவ்வாய்க்கிழமை (09) அனுமதியளித்தார்.

அத்துடன், சந்தேகநபர் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

இராஜகிராமம் சரஸ்வதி வித்தியாலயத்தில் குடிநீர் எடுப்பதற்காக தனது தம்பியுடன் சென்ற சிறுமியை, மேற்படி சந்தேகநபர் கத்தி முனையில் மிரட்டி அருகிலுள்ள பற்றைக்குள் இழுத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில், நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர், சிறுமியின் தம்பிக்கு மாம்பழம் உண்ணக்கொடுத்துவிட்டே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்.

தொடர்ந்து, சந்தேகநபர் யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதவான் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சந்தேகநபருக்கு பிணை வழங்கும்படி மன்றில் கோரியிருந்தார்.

அதற்கு நெல்லியடி பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து, சந்தேகநபருக்கு நீதவான் பிணை வழங்கினார்.

மேற்படி சந்தேகநபர் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .