2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குளவி தாக்கத்தால் பாடசாலைக்கு விடுமுறை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


குளவி தாக்கத்தால் கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்துக்கு  செவ்வாய்க்கிழமை (09) முதல் இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.

பாடசாலை வகுப்பறை கட்டிடத்தின் கூரையின் மேல் இருக்கும் குளவிக்கூட்டிலுள்ள குளவிகள் காற்றில் கலைந்து மாணவர்களை கொட்டுகின்றது.

இதனையடுத்து, மேற்படி குளவிக்கூட்டை அகற்றும் பொருட்டு செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் பாடசாலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.

பாடசாலை கட்டிடத்திலுள்ள குளவிக்கூட்டை கலைப்பதற்கான நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (09) இரவு மேற்கொள்ளப்படும் என அதிபர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .