2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாமனை தாக்கிய மருமகன்களுக்கு பிணை

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். துன்னாலை குடவத்தை பகுதியில் மாமனாரை தாக்கிய இரு மருமகன்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் புதன்கிழமை (10) அனுமதியளித்தார்.

அத்துடன், இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் மாமனார் வீட்டிற்கு சென்ற மருமகன்கள், மாமனாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மாணிக்கம் புஸ்பன் (வயது 40) என்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, செவ்வாய்க்கிழமை (09) வீடு திரும்பியதும் மருமகன்கள் தாக்கியமை தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் இரு மருமகன்களும் கைது செய்யப்பட்டு, புதன்கிழமை (10) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, நீதவான் சந்தேகநபர்களான மருமகன்கள் இருவருக்கும் பிணை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .