2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வீதியால் நடந்துசென்றவர் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கொடிகாம் - நெல்லியடி வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூவர், புதன்கிழமை (10) இரவு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த எம்.ரஜனிகாந்த் (வயது 22) என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், கொழும்பிலிருந்து தனது சகோதரியுடன் பஸ்ஸில் வந்திறங்கி மேற்படி வீதியால் வீடு சென்றுகொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .