2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறை மண்கும்பானில் கடற்படை முகாமிற்கு அருகில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று வெள்ளிக்கிழமை (12) மதியம் கரை ஒதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளை நிறத்தில் பூ வடிவமிடப்பட்ட சேட்டுடன் முகம் மோசமாக சேதமடைந்த நிலையில் இச்சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயது மதிக்கத்தக்க ஆணொவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், சடலம் மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .