2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நம்மை நாம் ஆள வேண்டும்: மாவை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


"நாம் எம்மை ஆள வேண்டும். தன்னாட்சி செய்ய வேண்டும். எமது மக்கள் செய்த அர்ப்பணங்கள், போராட்டங்கள், தியாகங்கள் ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்ற வேண்டும்" என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவரை வரவேற்கும் நிகழ்வு யாழ்.தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே மாவை மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தமிழ் மக்களுடைய எந்த போராட்டத்தையும் யாரும் நிராகரித்துவிட முடியாது. தமிழர்களின் போராட்டம் நியாயமான உரிமை போராட்டம்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எங்கள் நிலங்களை அபகரித்து இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர், சிங்களக் குடியேற்றம் என்று தமிழர்களின் நிலங்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

காலையில் தந்தை செல்வா சதுக்கத்திற்கு சென்ற மாவை அங்கு மலர்மாலையிட்டு வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு, தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்று மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .