2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சம்பள பிணக்கு இருவர் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, இலகடி பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் சகோதரர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் புதன்கிழமை (17) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த தங்கராசா மகேந்திரம் (வயது 45), தங்கராசா யசோ (வயது 27) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மகேந்திரம் உழவு இயந்திரம் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். அவர் சாரதி ஒருவரை வேலைக்கமர்த்தி உழவு இயந்திரத்தை உபயோகப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், சாரதிக்கான சம்பள பாக்கிகள் சில மாதங்களாக வழங்கப்படாமையிட்டு, சாரதி மகேந்திரத்துடன் புதன்கிழமை (17) மாலை முரண்பட்டுள்ளார்.

முரண்பாடு முற்றியதில் சாரதி, மகேந்திரம் மீது பொல்லால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதனை தடுக்கச் சென்ற மகேந்திரத்தின் சகோதரர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .