2025 ஜூலை 12, சனிக்கிழமை

இந்திய சிறைக் கைதி தற்கொலைக்கு முயற்சி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கைதியொருவர், தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ராஜா (வயது 32) என்பவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற நிலையில், கடந்த புதன்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

இலங்கைக்கு கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்னர் 4 பேரில் ஒருவராக கைது செய்யப்பட்ட சந்தேகநபரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .