2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புலிகளின் கழுத்துப்பட்டி அணிந்திருந்தவர் கைது

George   / 2014 செப்டெம்பர் 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எம்.றொசாந்த்

தமிழீழ விடுதலை புலிகளின் விளையாட்டு துறையினுடைய கழுத்துப்பட்டியை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.சதீஸ்குமார் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் தந்த தகவலின் அடிப்படையில் விளையாட்டு அதிகாரியை தாம் கைது செய்ததாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி சென்றுள்ளார்.

இதன்போது, அவர் அணிந்திருந்த கழுத்துப்பட்டியில் 'விளையாட்டு பேரவை தமிழீழம்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

இதனை, அங்கு நின்ற சிலர் பார்வையிட்டு ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனையடுத்து, விளையாட்டு அதிகாரியை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருவதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .