2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

குளிர்களி விற்பனை நிலையம் மூடப்பட்டது

Thipaan   / 2014 செப்டெம்பர் 21 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினராசா

யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த குளிர்களி விற்பனை நிலையமொன்று நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டுள்ளதாக, உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விமலகுமார், ஞாயிற்றுக்கிழமை (21) தெரிவித்தார்.

சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த இரண்டு குளிர்களி விற்பனை நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

தொடர்ந்து விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் ஒரு விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், அந்த குளிர்களி விற்பனை நிலையத்தை சீர்செய்யும்படியும் உத்தரவிட்டார்.

அத்துடன், மற்றய குளிர்களி விற்பனை நிலையம் மோசமான முறையில் சுகாதார சீர்கேடான முறையில் இயங்கி வந்தமையால் அதனை உடனடியாக மூடும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .