2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மக்களுக்காக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன: டக்ளஸ்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


- யோ.வித்தியா


யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் அனைத்தும் இராணுவத்தினரின்; தேவைக்காக முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், அவை பொதுமக்களுக்காகவே முன்னெடுக்கப்படுவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்தேவி புகையிரதத்தின் பரீட்சார்த்த புகையிரத சேவை பளையிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை திங்கட்கிழமை (22) வந்தடைந்தது. இதன்போது,  ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'2010ஆம் ஆண்டு இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தால் இந்தத் திட்டம் தற்போது நிறைவேறியுள்ளது.  இந்த நாளுக்காக நாம் நீண்ட நாட்களாக காத்திருந்தோம். மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளார்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒன்று எமக்கு கிடைத்துள்ளது. இந்த நாளை மறக்க முடியாது.

சுய இலாபம் தேடும் நோக்கில் சில அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். தற்போதுள்ள அரசு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது.

இதேவேளை, இங்கு யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம்  தெரிவிக்கையில்,


'யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் சந்தோஷமாகவுள்ளார்கள். புகையிரத
சேவை எமது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கருத வேண்டும்.  தற்போது பிரதேச மற்றும் கிராமிய மட்டத்தில் புகையிரத சேவை தொடர்பான பல விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .