2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணி சுவீகரிப்பிற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

George   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, எம்.றொசாந்த்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பிற்கு எதிராக, நாளை செவ்வாய்க்கிழமை(23) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் திங்கட்கிழமை(22) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு பரந்தன் (ஏ-35) வீதியில்  வட்டுவாகன் பாலத்திற்கான வீதியிலிருந்து இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதி உள்ளடங்கலான 614 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு சொந்தமாக இருக்கின்றது.

காணி அமைச்சின் கட்டளைக்கு அமைவாக இந்த காணி முல்லைத்தீவு கடற்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலரால் துண்டுப்பிரசுரங்கள் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்தன.

இது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு எமது ஆட்சேபணையை தெரிவித்திருந்தோம்.

தற்போது அந்தக்காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்யவுள்ளதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நிலஅளவை திணைக்களத்திலிருந்து காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அந்தக்கடிதத்தில், உங்கள் காணிகளை எதிர்வரும் 23ஆம் திகதி அளவீடு செய்யவிருக்கின்றோம், தங்களுடைய ஆவணப் பிரதிகளுடன் எல்லைகளை காண்பிப்பதற்காக காலை 9 மணிக்கு வருகை தருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், காணி அளவீடு செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக, எனது தலைமையில் செவ்வாய்க்கிழமை(23) போராட்டம் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில்; வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும், ஏனைய உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .