2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை தோண்டவேண்டாம்'

Thipaan   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யோ.வித்தியா

வேலணை பிரதேச சபை வளாகத்தில் முன்னர் மயானம் இருந்ததென்றும் ஆகையால் தொடர்ந்து அந்த இடத்தில் தோண்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டாம் எனவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், திங்கட்கிழமை (22) உத்தரவிட்டார்.

அத்துடன், எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியின் வரைபடங்கள் மற்றும் இட அமைவு என்பவற்றின் வரலாற்று குறிப்புகள் தொடர்பிலும் வேலணை பிரதேச சபை எத்தனையாம் ஆண்டளவில் குறித்த காணியை பெற்று கொண்டு கட்டடங்கள் அமைத்தது என்பது தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்;கு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

வேலணை பிரதேச சபையில் மின்மாற்றிக்கான கம்பங்கள் நடும்பொருட்டு மின்சார சபை ஊழியர்களால் கடந்த 18ஆம் திகதி குழியொன்று  வெட்டப்பட்டது.

இதன்போது, மண்டையோடு மற்றும் கை எலும்பின் பாகங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து 19ஆம் திகதி அவ்விடத்திற்கு வந்த பதில் நீதவான், விசாரணைகளை மேற்கொண்டதுடன், மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சட்டவைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் மேலும் பல மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் இருக்கலாம் என்ற ரீதியில் அந்த இடத்தை மேலும் தோண்டும் படியும் பதில் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதன் படி திங்கட்கிழமை (22) குறித்த பகுதியை தோண்டும் பணிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போது சம்பவ இடத்துக்கு வருகைதந்த பதில் நீதவான், குறித்த பகுதி முன்னர் மயானமாக இருந்ததாக தெரிவித்து, அகழ்வு பணியை நிறுத்துமாறும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .