2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எரிகாயங்களுக்குள்ளான இளைஞன் மரணம்

George   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்ப சென்ற போது,   முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை(22) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ரி.சிவதர்சன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .