2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊர்காவற்றுறையில் சுனாமி ஒத்திகை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்வு பருத்தியடைப்பிலுள்ள கோட்டையடி பொதுமண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது.

சுனாமி என்றால் என்ன, சுனாமியால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புக்கள், சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், எவ்வாறான பொருட்களை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும், பாதுகாப்பை எவ்வாறு தேடிக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வூட்டும் விடயங்கள் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

சுனாமி அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் வீட்டுக்கு ஒருவர் கலந்துகொள்ளும் வகையில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஊர்காவற்துறை பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .