2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் இல்லத்தில் கைவரிசை: இருவர் கைது

George   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள சிறுவர் இல்லம் (எலிம்) ஒன்றில் இருந்த நான்கு மின்விசிறிகளை திங்கட்கிழமை(22) இரவு திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த இளைஞர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை(23) மாலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் புதன்கிழமை (24) தெரிவித்தனர்.

சிறுவர் இல்லத்திலிருந்த தலா4000ரூபாய் பெறுமதியான மின்விசிறிகள் இவ்வாறு திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(23) மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து, 21 மற்றும் 22 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .