2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அனுமதியின்றி மதுபானம் விற்றவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 25 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, கெருடாவில் பகுதியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் புதன்கிழமை (24) தீர்ப்பளித்தார்.

மேற்படி நபர் கடந்த 19ஆம் திகதி வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது, அந்நபரிடம் இருந்து இரண்டரை போத்தல் மதுபானத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்நபர் ஏற்கனவே மூன்று தடவைகள் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் குறைந்தளவு அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மீண்டும் நான்காவது தடவையாக இந்நபரை மன்றில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் அதிகபட்ச அபராத தொகையான 25 ஆயிரம் ரூபாய் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .