2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வெலிஓயாவுக்கு நிதி கொடுப்பதில்லையென பிரேரணை நிறைவேற்றம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா, யோ.வித்தியா

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டரீதியற்ற முறையில் இணைக்கப்பட்டுள்ள வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்கு வடமாகாண சபையில் இருந்து எவ்வித நிதியுதவிகளும் செய்யக்கூடாது என்ற பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் வியாழக்;கிழமை (25) இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மேற்படி பிரேரணையை கொண்டு வந்தார்.

இந்த பிரேரணைக்கு சபையின் பிரசன்னமாகியிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.

பிரேரணை சபையின் முன்வைத்து ஜெகநாதன் உரையாற்றுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்ற பட்சத்தில், ஆறாவது பிரதேச சபையாக வெலிஓயா சட்டரீதியற்ற வகையில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படாமல் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதிகளில் அதிகளவான நிதி வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்கு செல்கின்றது.
அதனால், வடமாகாண சபையால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொடுக்கும் உதவிகளில் எந்தவொரு நிதியும் வெலிஓயாவுக்கு செல்லக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .