2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணியின் தாலிக்கொடி அறுத்தவர் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தாவடி பத்திரகாளியம்மன் கோவில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாலிக்கொடியை அறுத்தவர் வியாழக்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) கூறினர்.


கர்ப்பிணி பெண்ணுடைய 12 பவுண் தாலிக்கொடியை, மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபர் அறுத்துச் சென்றுள்ளார்.  அறுத்துச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்ட பெண், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

பெண்ணின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு, இணுவிலைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .