2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எமது உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவே பனையோலை மாலை

Princiya Dixci   / 2015 மார்ச் 24 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பனைசார் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் எமது உற்பத்திகளுக்கு நல்லதொரு மதிப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே திங்கட்கிழமை (23) வளலாயில் நடைபெற்ற காணி கையளிக்கும் நிகழ்வில் பனை ஓலையில் வடிவமைக்கப்பட்ட மாலைகள் போடப்பட்டதாக யாழ்.மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.மோகனேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளில் விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு வளலாயில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற போது, அந்நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருக்கு பனை ஓலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன.

இவ்வாறு பனை ஓலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டமை தொடர்பில் திட்டமிடல் பணிப்பாளர் கருத்துக்கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இந்த பனை மாலைகளை பனை அபிவிருத்திச் சபையிடமிருந்து பெற்றுக்கொண்டோம். எமது உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இதனை செய்தோம். மலர் மாலை அணிவித்தால் அதனை அணிவித்த அடுத்த கணமே கைவிட்டுவிடுவார்கள். ஆனால் திங்கட்கிழமை (23) அணிவித்த பனை ஓலை மாலையை விருந்தினர்கள் தம்முடனே எடுத்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

மாவட்டச் செயலகத்தால் ஒழுங்கு செய்யப்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இனிமேல் பனை ஓலை மாலையே பயன்படுத்தப்படும். இந்த மாலையை கற்பகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். கற்பகம் விற்பனை நிலையங்களில் இந்த மாலைகளை 250 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X