2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

லலித், குகன் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 25 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

கைது செய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி முன்னிலை சோஷலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். நகரில் இன்று புதன்கிழமை (25) நடத்தப்பட்டது.

'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?', 'லலித், குகன் ஆகியோரை உடன் விடுதலை செய்', போன்ற வாசகங்கள் ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லலித், குகன் இருவரும் காணாமற்போய் மூன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் இருவருக்கும் என்ன நடந்தது என்று எந்தவொரு தகவலையும் அரசாங்கம் வெளியிடவில்லை. லலித், குகன் மட்டுமல்ல, கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரையில் எந்தவித தகவல்களையும் அரசு வெளியிடவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.  

தமது போராட்டம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் அவர்கள் இதன்போது பொதுமக்களுக்கு வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X