2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நன்னடத்தை பாடசாலையிலிருந்து இரண்டு சிறுவர்கள் மாயம்

George   / 2015 மார்ச் 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

அச்சுவேலியில் அமைந்துள்ள அரசசான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களை புதன்கிழமை(25) மாலை முதல் காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். 

நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சித்திரவேல் சிந்துஜன் (வயது 15), மன்னார், வங்காலையைச் சேர்ந்த கணபதிபிள்ளை விஜயகாந் (வயது16) ஆகிய இரண்டு சிறுவர்களே காணாமல் போயுள்ளனர்.

இந்த இரண்டு சிறுவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸாரர் கூறினர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X