2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வலி வடக்கு வீதி புனரமைப்புக்கு 12 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Gavitha   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் கீழுள்ள வீதிகளில் புனரமைப்புக்காக சபையில் இந்தாண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 12.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது பிரதேச சபை வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கின்றது. இருந்தும் வீதி புனரமைப்புக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

அளவெட்டி மத்தியில் பள்ளியாவத்தை வீதி, அளவெட்டி கிழக்கிலே சீரட்டிபாய் வீதி, தம்மலை காட்டுப்புலவீதி, அளவெட்டி மேற்கு மல்லாகம் காளி கோயில் குறுக்குவீதி, மல்லாகம் அளவெட்டி முதலாம் குறுக்கு வீதி, தெல்லிப்பழை சைவப்பிரகாசம் வீதி, இளவாலை கிறேசல் வீதி போன்றவை புனரமைக்கப்படவுள்ளன.

45 கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய எமது கிராம அலுவலர் பிரிவில் அரைவாசி கிராம அலுவலர் பிரிவுகள் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கின்றன. விடுவிக்கப்பட்டு வரும் இடங்களுக்கான தேவைகள் அதிகமாகவுள்ளது.
கிணற்றில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இதுவரையில் 6 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக செலவு செய்துள்ளோம் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .