2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மது போதையில் துவிச்சக்கர வண்டி செலுத்தியவருக்கு எச்சரிக்கை

Sudharshini   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

மதுபானம் அருந்திவிட்டு துவிச்சக்கரவண்டியில் பளைப் பகுதியிலுள்ள வீதியில் சென்ற 55 வயது நபரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கடுமையாக எச்சரிக்கை செய்து திங்கட்கிழமை (20) விடுவித்தார்.

மது அருந்திய வயோதிபர், வீதியில் துவிச்கக்கரவண்டியை அங்கும் இங்கும் ஓட்டிச் செல்வதை அவதானித்த பளைப் பொலிஸார், அவரைக் கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன், அவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

திங்கட்கிழமை (20) வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, வயோபதிபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.  இதனையடுத்து  நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்து அவரை விடுவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .